×

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை: கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு

மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் ஜூலை 4-ம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்பொழுது, தேர்தலை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கமிட்டித் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா அறிவித்தார்.

இந்த நிலையில், தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர்நீதிமன்றம் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

The post இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை: கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Guwahati High Court ,Indian ,Bajaka ,GP ,Brij Pushan ,Wrestling Commission of India ,Indian Wrestling ,Assembly ,Dinakaran ,
× RELATED 2 நிரந்தர நீதிபதிகள் கொலிஜியம் பரிந்துரை